அளவில்லா பயணச் சலுகையை வழங்கும் பெங்களூரு மெட்ரோ 
இந்தியா

அளவில்லா பயணச் சலுகை வழங்கும் பெங்களூரு மெட்ரோ

மிக விரைவான, மிக எளிதான பயணத்தை ஏற்படுத்தித் தரும் பெங்களூரு மெட்ரோ ரயிலில் தற்போது ஒரு நாள் மற்றும் 3 நாள்களுக்கு என அளவில்லா பயணச் சலுகைத் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

DIN


பெங்களூரு: மிக விரைவான, மிக எளிதான பயணத்தை ஏற்படுத்தித் தரும் பெங்களூரு மெட்ரோ ரயிலில் தற்போது ஒரு நாள் மற்றும் 3 நாள்களுக்கு என அளவில்லா பயணச் சலுகைத் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் இந்த சலுகைத் திட்டம், ஒரு நாள் மற்றும் மூன்று நாள்களுக்கென தனித்தனி பாஸ்களை பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ.200 பாஸ் அல்லது மூன்று நாள்களுக்கு ரூ.400 பாஸ் பெற்றுக் கொண்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதில் திரும்ப செலுத்தத்தக்க ரூ.50 வைப்புத் தொகையும் அடங்கும். இந்த பயணப் பாஸ் வைத்திருப்போர், அந்த குறிப்பிட்ட நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் நம்ம மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.

இந்த பாஸ்கள் ரயில் நிலைய டிக்கெட் வழங்கும் மையங்களிலேயே கிடைக்கும். இந்த பாஸை எந்த ரயில் நிலையத்திலும் ஒப்படைத்து ரூ.50ஐ பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்த பாஸ் முழுமையாக செயல்படும் வகையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

இன்றைய நிகழ்ச்சி

சொல்லப் போனால்... எல்லாருக்கும் இல்லையா, தீபாவளிப் பரிசு?

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

SCROLL FOR NEXT