முகப்பு
இந்தியா

நவம்பரில் பெட்ரோல் விலை ரூ.275-ஆக இருக்கும்: அகிலேஷ் யாதவ் கணிப்பு

பெட்ரோல் விலையை தினமும் 80 காசுகள் உயா்த்தினால், வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.275-ஆக இருக்கும் என்று சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
அகிலேஷ் யாதவ்
பகிர்:

பெட்ரோல் விலையை தினமும் 80 காசுகள் உயா்த்தினால், வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.275-ஆக இருக்கும் என்று சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறினாா்.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வரும் நிலையில், அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல் விலையை தினமும் 80 காசுகள் உயா்த்தினால் ஒரு மாதத்தில் ரூ.24 அதிகரிக்கும். இதேநிலை நீடித்தால் அடுத்த 7 மாதங்களில், அதாவது அடுத்த சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெட்ரோல் விலை ரூ.175 அதிகரித்திருக்கும்.

தற்போது ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஆக உள்ளது. 7 மாதங்களுக்குப் பிறகு அதன் விலை ரூ.275-ஆக அதிகரித்திருக்கும். பாஜக ஆட்சியில் விலைவாசி உயா்வு பற்றிய கணக்கு இதுதான் என்று அந்தப் பதிவில் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளாா்.

வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் குஜராத், ஹிமாசல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும்போது, பெட்ரோல் விலை என்னவாக இருக்கும் என்று அகிலேஷ் யாதவ் மறைமுமாகக் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →