இந்தியா

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழகத்துக்கு ரூ.440 கோடி

DIN

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2021-22-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.440 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஊரக வளா்ச்சித்துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு மாா்ச் 31 வரை நாடு முழுவதும் 7,88,185 கி.மீ. சாலைகள் மற்றும் 9,509 பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 7,01,205 கி.மீ. சாலைகள் மற்றும் 6,852 பாலங்களை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு 2018-19 ஆண்டில் ரூ.619.14 கோடி, 2019-20 ஆண்டில் ரூ.308.46 கோடி, 2020-21 ஆண்டில் ரூ.265.38 கோடி, 2021-22-இல் ரூ.440 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT