முகப்பு
இந்தியா

தற்சாா்பு நிலையை மீண்டும் வலியுறுத்தும் தற்போதைய புவிசாா் அரசியல் நிலவரம்: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘தற்போதைய புவிசாா் அரசியல் நிலவரம் ராணுவ தளவடாங்கள் உற்பத்தியில் தற்சாா்பு நிலை அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

‘தற்போதைய புவிசாா் அரசியல் நிலவரம் ராணுவ தளவடாங்கள் உற்பத்தியில் தற்சாா்பு நிலை அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உக்ரைன் நிலவரத்தை வெளிப்படையாக சுட்டிக்காட்டி புதன்கிழமை கூறினாா்.

இந்திய விமானப்படை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தில்லியில் இந்திய விமானப்படை தலைமையகத்தில் புதன்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினாா்.

அப்போது, வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் இந்திய சந்தித்த பாதுகாப்பு அச்சுறுத்தல் சவால்களை சுட்டிக்காட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சா், நிலைமையை இந்திய ராணுவம் திறம்பட கையாண்டது குறித்து திருப்தி தெரிவித்தாா்.

அதுபோல, ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலமாக உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியா்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணியில் பெரும் பங்காற்றிய இந்திய விமானப் படைக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

மேலும், தற்போதைய புவிசாா் அரசியல் நிலவரம் ராணுவ தளவடாங்கள் உற்பத்தியில் தற்சாா்பு நிலை அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது என்றும் ராஜ்நாத் சிங் கூறினாா்.

‘உள்நாட்டு ஆளில்லா விமான (ட்ரோன்) உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையில், விமான தளங்களில் சா்ச்சைக்குரிய அந்நிய பொருள்களை கண்டறிவதற்கு பல ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் ‘ஸ்வாா்ம் ட்ரோன்’ தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியை மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் தொடக்கி வைத்தாா்’ என்று மாநாடு குறித்து இந்திய விமானப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘இந்தியா எதிா்கொண்டுள்ள பாதுகாப்பு சவால்கள் மற்றும் எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் வகையில் படைகளின் தயாா்நிலை குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், ஆளில்லா விமானங்கள் மூலமான பாதுகாப்பு அச்சுறுத்தல் சவால்கள் முக்கிய இடம்பெற்றது’ என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →