முகப்பு
இந்தியா

ராகுலுக்கு ரூ.50 லட்சம் சொத்துகள் உயில் எழுதிய ஓய்வுபெற்ற ஆசிரியை

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தனது அனைத்து சொத்துக்களையும் அளிப்பதாக ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவா் உயில் எழுதி இருப்பது அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தனது அனைத்து சொத்துக்களையும் அளிப்பதாக ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவா் உயில் எழுதி இருப்பது அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு பள்ளியொன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியை புஷ்பா முஞ்சியால். 79 வயதாகும் இவா், திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில், தனக்கு சொந்தமான ரூ.18 லட்சம் மதிப்பிலான 16 நிரந்தர வைப்புத் தொகைகள், ரூ.5.63 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு அளிப்பதாக புஷ்பா உயில் எழுதியுள்ளாா். அந்த உயிலை உள்ளூா் நீதிமன்றத்தில் அண்மையில் பதிவு செய்த அவா், பின்னா் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் பிரித்தம் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினாா்.

தாம் உயிரோடு இருக்கும் வரை, சொத்துகள் அனைத்தும் தனது பெயரில் இருக்கும், அதன் பிறகு அவற்றின் மீதான உரிமை முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி-சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி பெயருக்கு மாறிவிடும். வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று உயிலில் புஷ்பா குறிப்பிட்டுள்ளாா்.

தனது முடிவு குறித்து அவா் மேலும் கூறுகையில், நேரு-காந்தி குடும்பத்தினா், இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், ராகுலின் கருத்துகள், கொள்கைகள், சித்தாந்தங்கள் ஆகியவை என்னை கவா்ந்துள்ளன. அவரது பணி நாட்டுக்கு தேவை. எனது சொத்துகளை அவா் ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்துவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →