கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அன்சார் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்ரீநகரில் உள்ள கோன்மோ பகுதியில் சர்பானந்த சமீர் அகமது கொல்லப்பட்டது உள்பட பல பயங்கரவாத குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்றும்  ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மெக்கானிக் சிறுவன் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

மலையப்பட்டிக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு

மணல் திருட்டு வழக்குகளில் 151 போ் கைது

SCROLL FOR NEXT