கோப்புப் படம் 
இந்தியா

இறைச்சி கடைகளை மூட யாருக்கும் அதிகாரமில்லை: திரிணமூல்

நவராத்திரிக்காக தில்லியில் இறைச்சி கடைகளை மூட மேயர் உள்பட யாருக்கும் அதிகாரமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகித் கோகலே தெரிவித்துள்ளார்.  

DIN

நவராத்திரிக்காக தில்லியில் இறைச்சி கடைகளை மூட மேயர் உள்பட யாருக்கும் அதிகாரமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகித் கோகலே தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக தெற்கு தில்லி நகராட்சி ஆணையருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தில்லியிலுள்ள நவராத்திரியையொட்டி அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிட்டது தவறானது என்று சுற்றறிக்கை விட வேண்டும் என்று கோரியுள்ளார். 

மேலும், நினைத்த சட்டங்களை இயற்ற தில்லி ஒன்றும் கற்பனை நகரம் அல்ல. தில்லியில் இறைச்சிக் கடைகளை மூட மேயர் உள்பட யாருக்கு அதிகாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

நவராத்திரி விழாவையொட்டி தில்லியில் இறைச்சி விற்பனை கூடாது என தில்லி தெற்கு, கிழக்கு மேயர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 9 நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை காட்டிலும் வடஇந்திய மாநிலங்களில் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT