முகப்பு
இந்தியா

ஆந்திர அமைச்சரவை ராஜிநாமா

ஆந்திர அமைச்சரவையை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கும் வகையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 5:48 PM
ஆந்திர அமைச்சரவை ராஜிநாமா
பகிர்:


ஆந்திர அமைச்சரவையை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கும் வகையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து 24 அமைச்சர்களும், தங்களது ராஜிநாமா கடிதத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர அமைச்சரவையை மாற்றியமைக்கும் வகையில், இந்த அமைப்பரவை ராஜிநாமா நடந்துள்ளதாகவும் புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆந்திர மாநில ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.