இந்தியா

ஜம்மு எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடா்பாக டிஐஜி எஸ்.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையையொட்டி அக்னூரில் உள்ள பர்ப்வால் துணைப் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். 

முன்னதாக, எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய ஒரு பையை மீட்டனர். 

அந்த பையில், நவீன துப்பாக்கிகள், 2 ரைபிள் மேகசின்கள், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல்கள், 49 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 4 பிஸ்டல் மேகசின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்திய எல்லைக்குள் ஆயுதங்களைக் கடத்த முயல்வது குறித்து சில உளவுத்துறை உள்ளீடுகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்புப் படையினர் அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டு, தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT