முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1,033 பேருக்கு கரோனா

நாட்டில் இன்று புதிதாக 1,033 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
நாட்டில் புதிதாக 1,033 பேருக்கு கரோனா
பகிர்:

நாட்டில் இன்று புதிதாக 1,033 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,033 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 11,639ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.

இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 4,30,31,958ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,530ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,198 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,24,98,789 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

நாட்டில் இதுவரை 185.20 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.