இந்தியா

தெலங்கானா: ரூ.1,000 கோடியில் கோகோ-கோலா தொழிற்சாலை

தெலங்கானா மாநிலத்தில் ரூ.1,000 கோடியில் கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலையை  அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

DIN

தெலங்கானா மாநிலத்தில் ரூ.1,000 கோடியில் கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலையை  அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் ரூ.1,000 கோடி முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக ஹிந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (எச்சிசிபி) நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்பனேற்றப்பட்ட பானங்கள், பழச்சாறுகள் மற்றும் தண்ணீருக்கான ஆலை சித்திப்பேட்டை மாவட்டத்தின் பண்டாதிம்மாபூரில் உள்ள உணவு பதப்படுத்தும் பூங்காவில் அமைய உள்ளது.

கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலையில் முதற்கட்டமாக ரூ.600 கோடியும், அடுத்தடுத்த கட்டங்களில் ரூ.400 கோடியும் முதலீடு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த முதலீட்டை ரூ.1,000 கோடியாக உயர்த்தும் என்று தெலங்கானாவின் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்தாண்டு முதல் இத்தொழிற்சாலை செயல்பட இருப்பதாகவும் இதில் ஏராளமானவர்களுக்குப் பணி வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த ஆலையில் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்த  கோகோ-கோலா நிறுவனத்திற்குப் பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT