முகப்பு
இந்தியா

ஜம்முவில் இஸ்லாமியர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல்: இருவர் காயம் 

ஜம்மு-காஷ்மீர்,  ஹந்த்வாரா பகுதியில் இஸ்லாமியர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 7 ஏப்ரல், 2022 at 4:26 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதியில் இஸ்லாமியர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 

குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா நகரில் உள்ள மசூதியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த இஸ்லாமியர்களுக்கும், விடியோக்களை பதிவு செய்துகொண்டிருந்த ராணுவ வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

இந்த வாக்குவாதம், மோதலாக மாறியது. இதன்விளைவாக ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் அப்துல் அஹத்மிர் மற்றும் முஜீப் அகமது சோபி என அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் சௌராவில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றார். 

இதுகுறித்து மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜாத் லோன் கூறுகையில், 

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் வருந்தத்தக்க நிலையின் விளைவுதான் இந்தச் சம்பவம் என்று கூறினார்.

மிகவும் அமைதியான நகரங்களில் ஒன்று ஹந்த்வாரா. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம் என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.