இந்தியா

பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: மக்களவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்

தினமணி

புது தில்லி: நாடாளுமன்றத்தின் 2022 }ஆம் ஆண்டின் நிதிநிலை கூட்டத்தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது. 

17}ஆவது மக்களவையின் 8}ஆவது கூட்டத் தொடரான இந்த அமர்வு, கடந்த ஜனவரி 31}ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதில், முதல் அமர்வு பிப்ரவரி 11} ஆம் தேதி வரை 10 நாள்களும், இரண்டாவது அமர்வு மார்ச் 14} இல் தொடங்கி 17 நாள்களும் நடைபெற்றது. ஆனால், கூட்டத் தொடர் ஒரு நாள் முன்னதாக நிறைவு பெற்றது. 2022}2023 நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1}இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் மீதான பொது விவாதம் முதல்கட்ட அமர்வில் மொத்தம் 15 மணி 35 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த அமர்வில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநிலங்களவையில் மொத்தம் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 6 நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2022}ஆம் ஆண்டுக்கான பேரழிவு ஆயுதங்கள் விநியோக (சட்டவிரோத நடவடிக்கை தடை) திருத்த மசோதா, வியாழக்கிழமை அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT