மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடா் முடித்துவைப்பு
மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துவைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துவைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இதுகுறித்து மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடா் ஒரு நாள் முன்கூட்டியே வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடா்ந்து, நடப்பு மக்களவையின் இந்த 8-ஆவது தொடா் குடியரசுத் தலைவரால் வியாழக்கிழமை முடித்துவைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு கட்டங்களாக, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக 27 அமா்வுகளில் நடைபெற்ற மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடரில் உக்ரைன் விவகாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.