மனதின் குரல்: மக்களிடம் கருத்துக் கேட்கிறாா் பிரதமா் மோடி
பிரதமர் மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.
பிரதமர் மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.
88-வது மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
இதையும் படிக்க- ஹஜ் பயணம்: தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “மனதின் குரல் மூலம் நாம் அடிமட்ட அளவில் மாற்றம் ஏற்படுத்துபவர்களின் அசாதாரணமான சாதனைகளை கொண்டாடி வருகிறோம். இத்தகைய உந்து சக்தியாக திகழும் வாழ்க்கைப் பயணங்களை நீங்கள் அறிவீர்களா? அவற்றை 24-ந் தேதி ஒலிபரப்பாகும் இம்மாத நிகழ்ச்சிக்காக பகிருங்கள்.
MyGov தளத்திலோ, NaMo செயலியிலோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ பகிர்ந்து கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.