கொள்ளைச் சம்பவத்தில் மகன் கொல்லப்பட்டாரா? இந்திய மாணவரின் தந்தை சந்தேகம் 
இந்தியா

கொள்ளைச் சம்பவத்தில் மகன் கொல்லப்பட்டாரா? இந்திய மாணவரின் தந்தை சந்தேகம்

கனடாவின் டோரண்டோ பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவரின் தந்தை, கொள்ளைச் சம்பவத்தின் போது தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கனடா காவலர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்.

DIN

கனடாவின் டோரண்டோ பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவரின் தந்தை, கொள்ளைச் சம்பவத்தின் போது தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கனடா காவலர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியைச் சேர்ந்த 21 வயது கார்த்திக் வாசுதேவ், வியாழக்கிழமை மாலை ஷெர்போர்னே ரயில்நிலையத்தின் சுரங்கப் பாதை வாயிலில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இது குறித்து அவரது தந்தை ரித்தேஷ் வாசுதேவ் கூறுகையில், என் மகன் இந்த ஜனவரி மாதம்தான் கனடாவில் பன்னாட்டு மேலாண்மை படிப்பில் சேர்ந்து படிக்கச் சென்றான்.

படித்துக் கொண்டே டோரண்டோவிலுள்ள ஒரு உணவத்தில் அவர் பகுதிநேர வேலையும் செய்து வந்தார். டோரண்டோ காவல்துறையினர் தொலைபேசி மூலம் தகவல் அளித்த போதுதான் தங்களது மகன் இறந்தது பற்றி தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத ஒரு கருப்பு நிற மனிதர் தனது மகனை சுட்டுக் கொன்றதாகவும், இது கொள்ளைச் சம்பவத்தில் நடந்த கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கனடாவில், கருப்பு நிற பை, வெள்ளை நிற காலணி அணிந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களில் வெளியானது. ஆனால் இந்த செய்தி, உத்தரப்பிரதே மாநிலம் காஸியாபாத்தில் இருக்கும் ஒரு தம்பதிருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை, அவர்களது 21 வயது மகன் கார்த்திக் வாசுதேவ், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி பேருந்தைப் பிடித்து பகுதிநேர பணிக்காக டோரண்டோ சென்று கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். 

முதற்கட்ட தகவலின்படி, கார்த்திக் ஷேர்போர்னே மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் துப்பாக்கிக் குண்டு காயங்களால் கொல்லப்பட்டார். அவரது மரணம்  குறித்து வெள்ளிக்கிழமை கனடாவிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த கொலைக்கான காரணம்பற்றி இதுவரை எந்த தகவலும்  உறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து கனடாவின் டோரன்டோ நகருக்கான இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், அவரது உடலை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுட்டுரைப் பதிவை இணைத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது சுட்டுரையில், இந்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. கார்த்திக்கின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT