இந்தியா

நாட்டில் புதிதாக 1,054 பேருக்கு கரோனா

இந்தியாவில் புதிதாக 1,054 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


இந்தியாவில் புதிதாக 1,054 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 1,150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,30,35,271 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 1,258 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,25,02,454 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,685 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 11,132 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

இந்தியாவில் இதுவரை மொத்தம் 1,85,70,71,655 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT