நிதீஷ் குமார் (கோப்புப் படம்) 
இந்தியா

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்ற விழாவில் குண்டுவீச்சு

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்ற விழாவில் மேடையின் அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

DIN


பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்ற விழாவில் மேடையின் அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குண்டு வீசியது தொடர்பாக காவல் துறையினர் ஒருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நடைபெற்ற ஜன்சபா நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ் குமார் கலந்துகொண்டார். சில்வியா பகுதியிலுள்ள பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் மேடை அருகே மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசியுள்ளார். இந்த வெடிகுண்டு முதல்வர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்புறம் வெடித்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெடிகுண்டு வீசியதாக ஒருவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பாட்னாவிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ் குமாரை மர்ம நபர் ஒருவர் தாக்கியது குறிப்பிடத்தக்கது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT