இந்தியா

கரோனா நிலைமை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: கேஜரிவால்

தில்லியில் கரோனா நிலைமையை உன்னிப்பாக் கண்காணித்து வருகிறோம், மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

DIN

தில்லியில் கரோனா நிலைமையை உன்னிப்பாக் கண்காணித்து வருகிறோம், மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியதாவது, 

திங்கட்கிழமை நிலவரப்படி தலைநகர் தில்லியில் புதிதாக 2.70 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் தொற்று சற்று அதிகரித்து வருகிறது.

ஆனால், கரோனா தொற்று குறித்து மக்கள் தேவையின்றி கவலைகொள்ள வேண்டாம். தேவை ஏற்பட்டால் அனைத்து நடவடிக்கைகளும் தக்க நேரத்தில் எடுக்கப்படும். 

நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். 

தில்லியில் தற்போது 100 முதல் 200 வரை மட்டுமே கரோனா பதிவாகி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.  இப்போதைக்கு நேர்மறை விகிதத்தில் கவனம் செலுத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT