இந்தியா

மாற்றுத்திறனாளி, நோயுற்றவர்களுக்காக விமான நிலையங்களில் புதிய வசதி

DIN

புது தில்லி: நடப்பதற்கு சிரமப்படும் பயணிகளின் வசதிக்காக 14  விமான நிலையங்களில் ஆம்புலிஃப்ட் எனப்படும் மின்தூக்கிகள் மத்திய அரசின் ‘எளிதில் அணுகக்கூடிய இந்தியா’ திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளன.

சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத்திறனாளி பயணிகள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக ஏரோபிரிட்ஜ் இல்லாத விமான நிலையங்களுக்காக, 20 ஆம்புலிஃப்ட்களை இந்திய விமான நிலைய ஆணையம் வாங்கியது, 

மேக் இன் இந்தியா கொள்கையின் கீழ் உள்நாட்டிலேயே இவை தயாரிக்கப்பட்டன. டேராடூன், கோரக்பூர், பாட்னா, பாக்டோக்ரா, தர்பங்கா, இம்பால், விஜயவாடா, போர்ட் பிளேர், ஜோத்பூர், பெல்காம், சில்சார், ஜார்சுகுடா, ராஜ்கோட், ஹூப்ளி ஆகிய 14 விமான நிலையங்கள் இந்த வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 6 விமான நிலையங்களான திமாபூர், ஜோர்ஹாத், லே, ஜாம்நகர், புஜ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் இம்மாத இறுதிக்குள் செயல்பட வாய்ப்புள்ளது.

தலா ரூ 63 லட்சம் செலவில் வாங்கப்பட்ட ஆம்புலிஃப்ட்களை குறைந்த கட்டணத்தில் அதன் பயனாளிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் வழங்குகிறது.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகள் உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளை அனைவரும் முழுமையாக அணுகுவதை உறுதி செய்வதற்காக, சுகம்ய பாரத் அபியான் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT