முகப்பு
இந்தியா

ஆந்திரம்: தொழிற்சாலையில் தீ விபத்து; 6 பேர் பலி

ஆந்திரத்தில்  ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

Updated On : 14 ஏப்ரல், 2022 at 10:57 AM
பகிர்:

ஆந்திரத்தில்  ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தைச் சேர்ந்த அக்கிரெட்டிகுடேம் பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று(ஏப்ரல்-13) இரவு நைட்ரிக் அமிலம் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், விபத்தின்போது  பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் பலியாகினர். 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.