இந்தியா

நாட்டில் புதிதாக 1,007 பேருக்கு கரோனா; ஒருவர் மட்டுமே பலி

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு 1,007 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் நேற்று அதிகரித்த நிலையில், இன்று வியாழக்கிழமை சற்று குறைந்துள்ளது. திங்கள்கிழமை 861, செவ்வாய்க்கிழமை 796, புதன்கிழமை 1,088 ஆக இருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை 1,007 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,39,023 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 1 மட்டுமே உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.21,737ஆக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 818 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,06,228 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 11,058 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாக குறைந்துள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.23 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.25 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 186.22 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 83.08 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,34,877 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT