இந்தியா

உபி: இஸ்லாமிய பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சாமியார் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் ஆசிரமத்தின் தலைவரான பஜ்ரங் முனி தாஸ் கடந்த 2 ஆம் தேதி  இந்து சமயம் குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, சீதாப்பூரில் உள்ள மசூதிக்கு அருகே சென்றபோது ’இங்குள்ள இஸ்லாமியர்கள் யாராவது இந்து பெண்களுக்குத் தொல்லை கொடுத்தால் இஸ்லாமிய பெண்களைக் கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்வேன்’ எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர் சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூச்சலிட்டனர்.

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த பேச்சால்  பஜ்ரங் முனி தாஸைக் கைது செய்ய வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், இன்று சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT