இந்தியா

ஜி.எஸ்.டி. இழப்பீடு திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்: பிரதமருக்கு சத்தீஸ்கர் முதல்வர் கடிதம்

DIN

ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கடிதம் எழுதியுள்ளார்.

வருகிற ஜூன் மாதத்திற்குப் பிறகு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தினால் வரும் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

ஜி.எஸ்.டி இழப்பீடு மானியத்தை நிறுத்துவது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும். உற்பத்தி மாநிலமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எண்களின் பங்களிப்பு அதிகம். எனவே ஜி.எஸ்.டி. இழப்பீடு நிறுத்தப்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT