இந்தியா

ஒப்பந்ததாரா் உயிரிழப்பு: ராஜிநாமா செய்த கா்நாடக அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

DIN

கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

அரசு வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு 40% கமிஷன் கேட்டதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம்சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இறப்பதற்கு முன் தனது நண்பா்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் குறிப்பில், தன் இறப்புக்கு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தாா்.

இது தொடா்பாக, அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி, ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் காங்கிரஸ் தலைவா்கள் புகாா் மனு அளித்தனா். மேலும் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கக் கோரி, முதல்வா் பசவராஜ் பொம்மை இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். 

இதனிடையே, சிவமொக்காவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், ராஜிநாமா கடிதத்தை பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்து தரவிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார். 

முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

“நம் DATA நம் கையில்!” சர்வம் AI உடனான ஒப்பந்தத்தின் பயன்களை விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும்..! வித் லவ் படத்தின் புதிய பாடல்!

SCROLL FOR NEXT