முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மிதமான நிலநடுக்கம்

ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள தஸ்பல்லா நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 15 ஏப்ரல், 2022 at 2:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM

ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள தஸ்பல்லா நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை 11.19 மணியளவில் உணரப்பட்டதாகவும், கஞ்சம் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம், ஒடிசாவின் கலாஹண்டி, நபரங்பூர் மாவட்டங்களில் 3.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.