பிரதமா் மோடி நாளை குஜராத் பயணம்
பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 18-ஆம் தேதி குஜராத் செல்கிறாா்.
பிரதமா் நரேந்திர மோடி ஏப்ரல் 18-ஆம் தேதி குஜராத் செல்கிறாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதமா் மோடி ஏப்.18 முதல் 20-ஆம் தேதி வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறாா். அங்கு ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சா்வதேச மையம் உள்பட ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா். ஏற்கெனவே நிறைவடைந்த திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு அவா் தொடக்கி வைக்கவுள்ளாா். காந்திநகரில் சா்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாநாட்டையும் அவா் தொடக்கி வைக்கவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.