இந்தியா

தில்லி வன்முறை: 14 பேர் கைது

DIN


வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை துணை ஆணையர் உஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. வன்முறையில் கல்வீச்சும், சில வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில் காவலர்கள் பலர் காயமடைந்தனர். வன்முறையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தில்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி தில்லி வடமேற்கு காவல் துணை ஆணையர் கூறுகையில், "இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் 8 பேர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு குண்டடிபட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.

பின்னர் கூறுகையில், "இதுதொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT