அசாம் சாலை விபத்து: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டத்தில் பிகு குழுவினர், நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வாகனத்தில் நேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களுடைய வாகனம் கோஹ்பூர் அருகே வளையில் வந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தை தொடர்ந்து வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.