மதம் சார்ந்த ஊர்வலத்தின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வது ஏன்? என்று மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் உள்ள ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலின்போது இரு தரப்பினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருந்த நபர் எதிர்தரப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தில்லி காவல் துணை ஆய்வாளர் படுகாயமடைந்தார்.
காவலரைத் துப்பாக்கியால் சுட்ட 21 வயது இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய அசாதுதீன் ஓவைசி, அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மதம் சார்ந்த ஊர்வலத்தின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வது ஏன் என்று வினவியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.