இந்தியா

அஜந்தா குகைக்கே இந்த நிலைமையா?

ENS


ஔரங்காபாத்: வளாகத்தை சுத்தப்படுத்தவும், தோட்டப் பகுதிகளை பராமரிக்கவும் போதுமான தண்ணீர் இன்றி அஜந்தா குகை வளாக ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அஜந்தா குகை ஓவிய வளாகத்துக்கான குடிநீர் கட்டணம் செலுத்தப்படாததால், 2019ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட குடிநீர் சேவை இன்று வரை சரி செய்யப்படவில்லை.

குகைக்குள் வரும் இயற்கை வளத்தின் மூலம் எப்படியோ குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம். ஆனால், வளாகத்தை சுத்தம் செய்ய, தோட்டத்தைப் பராமரிக்க போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை என்று இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அஜந்தா குகை வளாகத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை குறித்து கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்தியா தாக்கரேவிடம் பேசியும், இந்த பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மிலன் குமார் கூறுகையில், அஜந்தா குகை வளாகத்துக்கான தண்ணீர் இணைப்புக் கட்டணம் ரூ.3.2 கோடி அளவுக்கு நிலுவை வைக்கப்பட்டிருப்பதாக மிகவும் அதிர்ச்சிதரும் தகவலை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT