முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. திங்கள்கிழமை 2 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) 1,247 ஆகக் குறைந்துள்ளது.

மேலும் 928 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

இதுவரை மொத்தம் 4,25,11,701 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,966 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,860 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 1,86,72,15,865 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.