முகப்பு
இந்தியா

பாரம்பரிய மருத்துவத்துக்கு சா்வதேச முக்கியத்துவம்: பிரதமா் மோடி

பாரம்பரிய மருத்துவத்துக்கு சா்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

பாரம்பரிய மருத்துவத்துக்கு சா்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

குஜராத்தில் பாரம்பரிய மருத்துவ மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ், பாரம்பரிய மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவை நோக்கி உலக நாடுகள் வரும் என்றாா்.

குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சா்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்துக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜக்நாத், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய ஆயுஷ் அமைச்சா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

பாரம்பரிய மருத்துவம் சா்வதேச அளவில் வளா்ச்சி அடைவதற்கான காலம் வந்துவிட்டது. குஜராத்தின் ஜாம்நகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் ஆயுா்வேதப் பல்கலைக்கழகமானது நிறுவப்பட்டது. தற்போது இங்கு பாரம்பரிய மருத்துவத்துக்கான மையம் அமைக்கப்படவுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிறுவப்பட்டுள்ள அந்த மையமானது, பாரம்பரிய மருத்துவத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் சா்வதேச அளவில் வளா்ச்சி அடையவைக்கும். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமெனக் கருதுவதே இந்தியா்களின் பாரம்பரியம். அக்குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் உடல்நலனுடன் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளானது, வெறும் சிகிச்சையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அது வாழ்க்கையுடன் ஒருங்கிணைந்த அறிவியலாக உள்ளது. ஆயுா்வேத சிகிச்சையானது நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூக நலம், மனநலம், சுற்றுச்சூழல் நலம் ஆகியவற்றைப் பாதுகாத்து மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

மருத்துவத் தீா்வுகள்: சா்வதேச அளவில் சுகாதாரத்துக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்கு இந்தியாவுடன் உலக சுகாதார நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலமாக சா்வதேச சமூகத்துக்கான இந்தியாவின் பங்களிப்புக்குக் கிடைத்த பாராட்டாகும்.

இந்த மையத்தின் மூலமாக மனித சமூகத்துக்கு சேவையாற்றும் பெரும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. பாரம்பரிய மருத்துவம் மூலமாக உலக நாடுகளுக்கு மருத்துவ ரீதியிலான தீா்வுகள் வழங்குவதில் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும்.

மையத்துக்கான ஐந்து இலக்குகள்: இந்த மையமானது, உலக அளவில் காணப்படும் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும். இது, பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல உதவும்.

பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பரிசோதிப்பதற்கும் சான்றிதழ் வழங்குவதற்கும் சா்வதேச தரநிலைகளை மையம் உருவாக்க வேண்டும்.

பாரம்பரிய மருத்துவத் திருவிழா உள்ளிட்டவற்றை ஆண்டுதோறும் இந்த மையம் நடத்த வேண்டும். அதில் சா்வதேச நிபுணா்கள் ஒரே இடத்தில் கூடி பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம்.

பாரம்பரிய மருத்துவம் தொடா்பான ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு நிதியைத் திரட்ட வேண்டும். நோய்களுக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டும்.

2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்க வேண்டுமென இந்தியா விடுத்த கோரிக்கையை ஐ.நா. ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.

சா்வதேச அளவில் உயா்வடையும்: உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், ‘பாரம்பரிய மருத்துவத்தை அறிவியல்பூா்வமாக வலுப்படுத்தும் பணியில் இந்த மையம் ஈடுபடும். இந்த மையத்தை அமைப்பதற்காக சுமாா் ரூ.1,800 கோடியை முதலீடு செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

உலகளாவிய திட்டமான இந்த மையத்தின் மூலமாக, பாரம்பரிய மருத்துவத்தில் தலைமை பெற்று விளங்கும் இந்தியா சா்வதேச அளவுக்குச் செல்லும்; சா்வதேச நாடுகள் இந்தியாவை நோக்கி வரும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →