இந்தியா

கேரளத்தில் ஆட்டோ, டாக்ஸி, பேருந்து கட்டணங்கள் உயர்கின்றன

DIN


திருவனந்தபுரம்: பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, மாநிலத்தில் ஓடும் ஆட்டோ,  டாக்ஸி, பேருந்து கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், குறைந்தபட்ச  டாக்ஸி கட்டணம் ரூ.200 ஆகவும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கேரள அரசு - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அமைப்பு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டது. கட்டண உயர்வை விரைவில் அமல்படுத்துவதாக பினராயி விஜயன் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை 12 ரூபாயாக உயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT