இந்தியா

நாட்டு நிலவரம் எப்படி இருக்கிறது? 5 முக்கிய தகவல்கள்

DIN


கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்ததால், மார்ச் மாதத்துடன் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வெறும் இரண்டு வாரத்துக்குள்ளேயே அதனை மீண்டும் கொண்டு வரும் நிலைமை வரும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முகக்கவசம் உள்ளிட்டவை கட்டாயமில்லை என்று ஒவ்வொரு மாநிலமாக அறிவிப்புகள் வெளியாகின.

ஆனால், நாட்டில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மீண்டும் முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

சரி.. நாட்டில் கரோனா நிலைமை எப்படி இருக்கிறது? வாருங்கள் முக்கியமான 5 தகவல்களைப் பார்க்கலாம்.

1. நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 2,000 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது ஒன்றல்ல இரண்டல்ல 66 சதவீதம் அதிகமாகும். கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை ஆயிரம் என்ற அளவில் இருந்த பாதிப்பு தற்போது இரண்டாயிரமாக அதிகரித்திருப்பது அச்சத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் 40 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

2. தில்லியில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தில்லியில் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவோரிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவிலும் கரோனா அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

3. 7 நாள்களில் 1,470 கரோனா நோயாளிகள் அதிகரிப்பு
இன்று ஒரே நாளில் 480 கரோனா நோயாளிகள் அதிகரித்து 12,340 ஆக உயர்ந்துள்ளது. அதுவே கடந்த புதன்கிழமை அதாவது ஏப்ரல் 13ல் இது 10,870 ஆக இருந்தது. கடந்த 7 நாள்களில் மட்டும் 1,470 நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்கள்.

4. கரோனா உறுதியாகும் விகிதம் இரட்டிப்பு
கடந்த 8 நாள்களில் மட்டும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 0.12 சதவீதமாக இருந்து வந்த நிலையில் தற்போது 0.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

5. உ.பி.யில் கரோனா நோயாளிகளில் 30% பேர் குழந்தைகள்
உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில் கரோனா பாதித்தவர்களில் 30 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட 107 பேரில் 33 பேர் குழந்தைகள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT