இந்தியா

சோனியா காந்தி - பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் 4வது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் 4வது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூக நிபுணரும் ஐ-பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கான ஆய்வறிக்கையை கடந்த வாரத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்தார்.

இந்த ஆய்வறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டிய மாநிலங்கள், கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

கடந்த 4 நாள்களில் மூன்று முறை சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திய நிலையில், தில்லியில் இன்று 4வது முறையாக சந்தித்து பேசி வருகிறார்.

இந்த சந்திப்பில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகன ஓட்டுநா் கொலை: மற்றொருவா் பலத்த காயம்

நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெற்ற மனுக்கள் பரிசீலனையில் 10,630 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

நாளை மின்தடை

SCROLL FOR NEXT