இந்தியா

'பாஜக தலைமை அலுவலகம் மீது புல்டோசரை ஏற்றுங்கள்': ஆம் ஆத்மி

பாஜக தலைமை அலுவலகத்தின் மீது புல்டோசரை ஏற்றினால் நாட்டில் நடக்கும் கலவரங்கள் தீரும் என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சந்தா கருத்து தெரிவித்துள்ளார். 

DIN


பாஜக தலைமை அலுவலகத்தின் மீது புல்டோசரை ஏற்றினால் நாட்டில் நடக்கும் கலவரங்கள் தீரும் என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சாதா கருத்து தெரிவித்துள்ளார். 

தில்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை நடந்த ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சாதா, ''பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் கலவரங்களையும், குண்டர் சட்டத்தையும் நடத்தி வருகிறது. இதனை நீங்கள் நிறுத்த வேண்டுமென்றால், பாஜக தலைமையகத்தின் மீது புல்டோசரை ஏற்ற வேண்டும். பாஜக தலைமையகத்தின் மீது புல்டோசரை ஏற்றினால் கலவரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன். என்ன மாதிரியான சூழல் தில்லியில் உருவாகியுள்ளது?'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

ராகவ் சாதா பதிவு

இதேபோன்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், பாஜக தலைமை அலுவலகத்தின் மீது புல்டோசரை ஏற்ற வேண்டும் என்று கருத்து பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT