இந்தியா

நிஜாமாபாத்: எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து முதியவர் பலி

நிஜாமாபாத்தில் எலக்ட்ரி ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் மூவர் காயமடைந்தனர். 

DIN

நிஜாமாபாத்தில் எலக்ட்ரி ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் மூவர் காயமடைந்தனர். 

புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் மின்சார இருசக்கர வாகனத்திற்கு சார்ச் செய்யும்போது பேட்டரி திடீரென வெடித்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் நான்கு பேர் தீக்காயங்கள் ஏற்பட்டது. 

இதையடுத்து, காயமடைந்தவர்கள் நிஜாமாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் முதியவரின் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், ஆனால் அவர் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்தவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், மின்சார வாகன நிறுவனம் மீது ஐபிசியின் 304-ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்), 337 (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலால் காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT