இந்தியா

நுகர்வோர் விலை குறியீட்டு எண் உயர்வு: தமிழகம் முதலிடம்

DIN


புது தில்லி: 2022 மார்ச் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன. பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

2022 மார்ச் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் தலா 3 புள்ளிகள் உயர்ந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1098-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1109 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1282 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. 876 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1270 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 926 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச சரிவு முறையே தமிழகத்திலும் கர்நாடகத்திலும் (தலா 10 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அரிசி, தானியங்கள், வெற்றிலை, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை வீழ்ச்சி இதற்கு காரணமாகும்.

கோதுமை, ஆட்டுக்கறி, பால், கடலை எண்ணெய், பச்சை மிளகாய், பருத்தி உள்ளிட்டவற்றின் விலை உயர்வின் காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்சமான உயர்வை மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் சந்தித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT