முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் த

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:39 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

வடக்கு காஷ்மீரின், பாரமுல்லாவில் உள்ள மால்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

Advertisement

பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, லஷ்கரை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். 

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றது. கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.