ராட்டை சுற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 
இந்தியா

காந்தி ஆசிரமத்தில் ராட்டை சுற்றிய பிரிட்டன் பிரதமர்: விடியோ

குஜராத் மாநிலம் அகமதாபகத்துக்கு வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார்.

DIN

குஜராத் மாநிலம் அகமதாபகத்துக்கு வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார்.

இந்தியா-பிரிட்டன் இடையே ராணுவம், வா்த்தகம், மக்கள் தொடா்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படுத்தும் வகையில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று வியாழக்கிழமை காலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வந்தடைந்தார். 

அகமதாபாத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும் ஜான்சன்,  பிரிட்டனில் முதலீடு செய்திருக்கும் முன்னணி தொழிலதிபா்களை சந்தித்து பிரிட்டன் மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் வணிக, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் குறித்து விவாதிக்கிறார்.  பிரிட்டனில் இருந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் செல்கிறார். 

மேலும், இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமான குஜராத்திற்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், காந்தி ஆசிரமம் அமைத்துள்ள சபர்மதிக்குச் சென்ற போரிஸ் ஜான்சன் அங்கிருந்த ராட்டையைச் சுற்றி மகிழ்ந்தார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை, ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும், பின்னர் மகாத்மா காந்தியின் சமாதிக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் ஜான்சன் கலந்து கொள்கிறார். பின்னர் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!

யார் இந்த மெல்லிடை நாயகி!

துபை இளவரசி... துஷாரா விஜயன்!

ஆக்சிஜன் சிலை... ஜான்வி!

SCROLL FOR NEXT