முகப்பு
இந்தியா

மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி

மக்களவையின் முன்னாள் துணைத் தலைவர் கரியா முண்டா, ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 22 ஏப்ரல், 2022 at 5:48 PM
பகிர்:

மக்களவையின் முன்னாள் துணைத் தலைவர் கரியா முண்டா, ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுவதாவது, 

வியாழன் இரவு குறைந்த இரத்த சர்க்கரை காரணமாக மயக்கமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது முண்டா நிலையாக இருப்பதாகவும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement

முண்டாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பசுமை வழிச்சாலை உருவாக்கப்பட்டது. 

முன்னதாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நிமோனியா மற்றும் பிற உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர், குந்தி தொகுதியில் எட்டு முறை எம்.பி.யாக இருந்தவர், பத்ம விபூஷன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.