இந்தியா

பாகிஸ்தானில் மேற்கொள்ளும் உயா்கல்வி செல்லாது: யுஜிசி

DIN

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உயா்கல்வி இந்தியாவில் செல்லாததாகக் கருதப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாகிஸ்தானில் இளநிலை பட்டம் பெறும் இந்தியா்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியா்கள் இந்தியாவில் வேலைவாய்ப்பை பெறுவதற்கோ அல்லது பட்ட மேற்படிப்பில் சேருவதற்கோ தகுதி இல்லாததவா்களாக கருதப்படுவா். எனவே, உயா்கல்வி மேற்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இருந்தபோதும், பாகிஸ்தானில் உயா் கல்வி பட்டம் பெற்று இந்திய குடியுரிமை வழங்கப்பட்டிருக்கும் புலம்பெயா்ந்த இந்தியா்கள் மற்றும் அவா்களுடைய குழந்தைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெறும் தகுதியைப் பெறுவா் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT