முகப்பு
இந்தியா

சிம்லாவின் தாராதேவி வனப்பகுதியில் 5 நாள்காக தொடர்ந்து எரியும் காட்டுத் தீ

சிம்லாவில் உள்ள தாராதேவி வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தீயில் கருகி ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்தன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பகிர்:

சிம்லாவில் உள்ள தாராதேவி வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தீயில் கருகி ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்தன. 

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் கொளுத்துவதால் வனப்பகுதி வறண்டு வருகிறது. இதனால் சிம்லாவில் உள்ள தாராதேவி வனப்பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 5 நாள்காக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாயின.

பல ஆயிரம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று மாலை வரை 7 கிலோமீட்டர் பரப்பளவு வரை தீயால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. ஹிமாசலில் பனி மற்றும் மழைப் பொழிவு இல்லாத நிலையில் காட்டுத் தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →