இந்தியா

வெப்ப அலை பாதிப்பு: ஒடிசாவில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ரத்து

DIN

புவனேஸ்வர்: ஒடிசாவில் நிலவும் வெப்பம் காரணமாக, ஒடிசா அரசு நாளை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒடிசாவின் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் வகுப்புகள் ஏப்ரல் 27 முதல் மே 2 வரை ரத்து செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சாஸ்வத் மிஸ்ரா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேர்வு, மதிப்பீடு, நிர்வாகப் பணிகள், ஆராய்ச்சிப் பணிகள் போன்ற பிற செயல்பாடுகள் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால், ஏப்ரல் 30ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஏற்கனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் இழந்த கல்வி நாள்களை ஈடுசெய்ய, ஜூன் 1 முதல் ஜூன் 16 வரை குறுகிய காலத்திற்கு கல்லூரிகள் மற்றும் பொது பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறையை ஒடிசா அரசு அறிவித்து இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT