கேரளத்தில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
கேரளத்தின் பயல்குளங்கரை கடலோர மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கேரளத்தின் பயல்குளங்கரை கடலோர மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆனாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம், உறவினரைப் பார்ப்பதற்காக நெடும்பசேரியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில்,
எதிர்த்திசையில் இருந்து வந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் நான்கு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.