மே மாதம் வரை இதிலிருந்து தப்ப முடியாதாம்! 
இந்தியா

மே மாதம் வரை இதிலிருந்து தப்ப முடியாதாம்!

நாம் இப்போது கடந்து கொண்டிருக்கும் ஏப்ரல் மாதமானது நாடு இதுவரை சந்தித்த ஏப்ரல் மாதங்களிலேயே மிகவும் வெப்பமான மாதம் என்ற பட்டத்துடன் இன்னும் ஓரிரு நாள்களில் நிறைவடையவிருக்கிறது.

DIN

நாம் இப்போது கடந்து கொண்டிருக்கும் ஏப்ரல் மாதமானது நாடு இதுவரை சந்தித்த ஏப்ரல் மாதங்களிலேயே மிகவும் வெப்பமான மாதம் என்ற பட்டத்துடன் இன்னும் ஓரிரு நாள்களில் நிறைவடையவிருக்கிறது.

அதுதான் தெரியுமே என்கிறீர்களா? தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.. கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதாவது அடுத்த 4 நாள்களுக்கு வடமேற்கு மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் புதிய வெப்ப அலை தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வடமேற்கு இந்திய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு இயல்பான வெப்ப நிலையை விட 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், மேற்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், விதர்பா பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதர வடமேற்கு மற்றும் மத்திய இந்திய மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையன்று, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் பல நகரங்களில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவியது. மார்ச் மாதம் முதலே கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.  இந்த நிலை மே மாதம் வரை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT