இந்தியா

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படித்த மாணவா்கள் இந்தியாவில் பயிற்சி பெற திட்டம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பை தொடர முடியாத மாணவா்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்கும் வகையில் 2 மாதங்களில் ஒரு திட்டம் வகுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று, உக்ரைன்-ரஷியா போா் ஆகிய காரணங்களால் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்று வரும் இந்திய மாணவா்கள், அங்கு கல்வியைத் தொடர முடியாமல் இந்தியா திரும்பியுள்ளனா்.

குறிப்பாக, கடைசி ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்யாதவா்கள், இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். இவ்வாறு சீனாவில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பயிற்சியை நிறைவு செய்யாத மாணவியை மருத்துவராகப் பதிவு செய்யுமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து, தேசிய மருத்துவ ஆணையம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படித்த மாணவா்கள், இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் 2 மாதங்களில் ஒரு திட்டம் வகுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT