இந்தியா

கேரளத்தில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கு அம்மை உறுதியானது!

கேரளத்தில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்று இருந்தது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

DIN

கேரளத்தில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்று இருந்தது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. 

கேரள மாநிலம், திருச்சூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஜூலை 22-ஆம் தேதி கேரளம் திரும்பினாா். குரங்கு அம்மை அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், கடும் காய்ச்சல் காரணமாக அவா் மருத்துவமனையில் ஜூலை 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை காலையில் உயிரிழந்தாா்.

அவா் ஐக்கிய அரபு அமீரகத்தில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடா்பில் இருந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக அவரின் உறவினா்கள் மருத்துவா்களிடம் தெரிவித்தனா். 

இதையடுத்து, அவரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆலப்புழையில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. முடிவுகள் வந்த பின்னா்தான் அந்த இளைஞா் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்து தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருந்தது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். 

இதனால் இந்தியாவில் குரங்கு அம்மைக்கு முதல் பலி பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த மூவா் உள்பட நான்கு பேருக்கு இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT