இந்தியா

மத்தியப் பிரதேசம்: தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 4 பேர் பலி

ANI


ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஜபல்பூர் பகுதியில் உள்ள கோஹல்பூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியான தாமோஹ் நகா அருகே உள்ள நியூ லைஃப் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்துநேரிட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணியும் நோயாளிகளை மீட்கும் பணியும் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவல்துறை கூறுகையில், மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். இது மிகப்பயங்கர தீ விபத்தாக உள்ளது. மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.  தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் மரணமடைந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படு என்று மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

கேதார்நாத் கோயில் திறப்பு!

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

SCROLL FOR NEXT